Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஓவியா குறித்து அவரது பெண் ரசிகர்கள் அதிருப்தி!

In சினிமா
Updated: 07:03 GMT, Sep 15, 2017 | Published: 06:59 GMT, Sep 15, 2017 |
0 Comments
2014
icon_com
This post was written by : Surenth
Oviya

பிக் பொஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக மாறிவிட்ட ஓவியா, தற்போது நடிக்கும் ஒரு திரைப்படத்தின் தலைப்புக்கு அவரது ரசிகர்கள், குறிப்பாக பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்த புதிய திரைப்படத்தில் ஓவியா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இந்தத் திரைப்படத்துக்கு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என பெயர் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் தலைப்பு இரட்டை அர்த்தத்தில் இருப்பதால் அது ஓவியாவின் பெண் ரசிகர்கள், குறிப்பாக ஓவியா ஆர்மி மத்தியில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

தலைவி ஓவியாவுக்கு நல்ல இமேஜ் உள்ளது எனவும் அதை இந்தத் திரைப்படம் கெடுத்துவிடும் போலிருக்கிறது எனவும் இவ்வளவு மோசமாகவா ஒரு தலைப்பு வைப்பார்கள்? ஓவியா இந்தத் தலைப்பின் அர்த்தம் தெரியாமல் ஒப்புக் கொண்டிருப்பார் எனவும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

ஓவியா இந்தத் திரைப்படத்தில் நடிக்கக் கூடாது எனவும் அல்லது தலைப்பை மாற்ற வேண்டும் எனவும் ஓவியாவின் பெண் ரசிகர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg