Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவின் பாதகத்தை சாதகமாக்கிக் கொள்ளுமா இந்தியா?

In கிாிக்கட்
Updated: 08:01 GMT, Sep 15, 2017 | Published: 08:01 GMT, Sep 15, 2017 |
0 Comments
1206
This post was written by : Anojkiyan

இந்திய அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆரோன் ஃபிஞ்ச் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது வலது காலில் ஏற்பட்ட காயம் மற்றும் தசைப்பிடிப்பு இன்னும் குணமாகாத காரணத்தால் அவர் இப்போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

ஃபிஞ்ச் அணியில் இடம்பெறாத பட்சத்தில் அவருக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்க வாய்ப்புண்டு. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg