Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காலிறுதியை உறுதி செய்தார் பி.வி.சிந்து

In விளையாட்டு
Published: 09:05 GMT, Sep 15, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Anojkiyan
pv-Sindhu-caste

கொரியா சுப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தென்கொரியாவின் தலைநகரான சியோலில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 16ஆம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் நிட்சோன் ஜின்டாபோலை எதிர்த்து விளையாடினார்.

சுமார் 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில், பி.வி.சிந்து 22-20, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

4ஆம் நிலை வீராங்கனையான சிந்து, காலிறுதியில் 19ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் மினாட்சு மிடானியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg