Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரோஹிங்கியா நெருக்கடிகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்: திபெத்திய அரசு

In இந்தியா
Published: 09:04 GMT, Sep 15, 2017 |
0 Comments
1101
icon_com
This post was written by : Kemasiya

இந்தியாவில் வசிக்கும் திபெத்தியர்கள் ரோஹிங்கியா நெருக்கடிகளை அமைதியான முறையில் தீர்க்க முன்வரவேண்டும் என திபெத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு நகரமான தர்மசாலாவில் உள்ள திபெத்திய அரசு நேற்றய தினம் (வியாழக்கிழமை) இந்த முடிவினை எடுத்துள்ளது. மியன்மாரின் ரோஹிங்கியா நெருக்கடி குறித்த தீர்மானங்களை அமைதியான முறையில் முன்னெடுக்க வேண்டும் என  திபெத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மியன்மாரில் இராணுவத்தினரால் நடத்தப்படும் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் பங்களாதேஷிற்கு இடம்பெயர்கின்றனர். குறித்த இன அழிப்பு தொடர்பில் ஜ.நா தீர்மானம் எடுக்க வேண்டும்.

மேலும் மியன்மார் அரசு மற்றும் ரோஹிங்கியா பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும் என திபெத்திய அரசின் வெளியுறவுத் தளபதி சொனாக் தக்போவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg