Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஸ்டெயினின் மீள் வருகை எப்போது? அவரே கூறிய பதில்

In கிாிக்கட்
Published: 09:18 GMT, Sep 15, 2017 |
0 Comments
1298
icon_com
This post was written by : Anojkiyan
sty

மீண்டும் காயம் ஏற்படாதவாறு, ஒருநாள் போட்டிகளிலிருந்து விளையாட்டை தொடங்க முடிவு செய்துள்ளதாக தென்னாபிரிக்க அணியின் புயல் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஸ்டெயின் பங்கேற்பார் என ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அவர் இத்தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்டெயின் கூறுகையில், “தற்போது நன்றாக பந்து வீசி வருகின்றேன். ஆனால், 4 நாள் கொண்ட போட்டி அல்லது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பளுவை அதிகரிக்க விரும்பவில்லை. மீண்டும் காயம் ஏற்படாதவாறு, ஒரு நாள் போட்டிகளிலிருந்து விளையாட்டை தொடங்க முடிவு செய்துள்ளேன்” என கூறினார்.

கடந்த நவம்பர் மாதம், அவுஸ்ரேலியா அணிக்கெதிரான பெர்த் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், வலது தோள்பட்டையில் ஸ்டெயினுக்கு காயம் ஏற்பட்டது. இதன் பின், அவர் எவ்வித போட்டியிலும் பங்கேற்கவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg