Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பழனிச்சாமியை அடுத்த வாரமே வீட்டிற்கு அனுப்புவோம்: டி.டி.வி.தினகரன்

In இந்தியா
Updated: 10:07 GMT, Sep 15, 2017 | Published: 10:03 GMT, Sep 15, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Kemasiya
fdsf

அடுத்த வாரத்திற்குள் முதல்வர் பழனிச்சாமி  மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை  விட்டிற்கு அனுப்புவோம் என அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் எங்கள் அணியின் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றது.

பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராக ஆதரவு தெரிவித்த  எங்கள் அணியின் சட்டசபை உறுப்பினர்களை பதவி   நீக்கம் செய்ய அவர் முயன்றார் என்றால் அவரை இறைவனும், நீதி தேவதையும், மன்னிக்க மாட்டார்கள் என கூறினார்.

மேலும் தி.மு.கவுடன் இணைந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, குறித்த கேள்விக்கு தி.மு.க தொடர்ந்த வழக்குடன் சேர்ந்து மனு தாக்கல் செய்ததில் என் தவறு? தி.மு.க தான் எங்களின் பிரதான எதிர்க்கட்சி, தி.மு.கவுடன் எங்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, கூட்டணி கிடையாது என பதில் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg