Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வரலாற்றில் இடம்பிடித்தார் ஹலிமா யாகோப்!

In
Published: 11:10 GMT, Sep 15, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Varothayan

சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியாக ஹலிமா யாகோப் தெரிவாகியிருந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆனால், வாக்கெடுப்பு ஏதுமின்றி அவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டமை, சிங்கப்பூரில் ஜனநாயகமற்ற நிலைமை என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் – மலாய் இனத்தவரான ஹலிமா யாகோப், நாடாளுமன்றத்தின் சபாநாயகராகப் பதவி வகித்தவர்.

சிங்கப்பூரில் சம்பிரதாயபூர்வமான பதவியாகக் கருதப்படும் ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடுவதற்கு, ஏராளமான விதிமுறைகள் காணப்படுகின்றன. அதில், 5 தடவைகளாகச் சிறுபான்மையினர் தெரிவாகவில்லையெனில், குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவரே ஜனாதிபதியாக முடியும் என்ற ஏற்பாடும் காணப்படுகிறது.

இதன்படி, இம்முறை ஜனாதிபதியாக, மலாய் இனத்தைச் சேர்ந்தவர்களே தெரிவுசெய்யப்படுவர் என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, அதற்குப் பலர் விண்ணப்பித்த போதிலும், அவர்கள் தகுதி பெற்றிருக்கவில்லை என அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டனர். இதனால், யாகோப் மாத்திரமே தகுதிபெற்ற வேட்பாளராக இருந்தார். எனவே, ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று கருத்துத் தெரிவித்த யாகோப், குறித்த ஒரு இனத்துக்கென பதவி ஒதுக்கீடு செய்யப்படத்தேவையில்லை என சிலர் தெரிவித்துவரும் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பல்லின மக்களும் வாழும் சிங்கப்பூரில் அனைத்து இன, மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதனால், அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்களையும் முறையாகவும், இயற்கையாகவும் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg