Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சைட்டம் எதிர்ப்பு பேரணி: கொழும்பை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!

In இலங்கை
Published: 12:14 GMT, Sep 15, 2017 |
0 Comments
1198
icon_com
This post was written by : Vithushagan

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரப்பிக்கப்பட்ட “சைட்டம் எதிர்ப்பு பேரணி” இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பை வந்தடைந்துள்ளது.

நாட்டில் உள்ள சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட வாகன பேரணி ஐந்து வழிகளின் ஊடாக கொழும்பை வந்தடைந்துள்ளன.

சுமார் 5000 வாகனங்கள் இந்த சைட்டம் எதிர்ப்பு பேரணியில் கொழும்புக்கு படையெடுத்து வந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 12ஆம் திகதியில் இருந்து 25 மாவட்டங்களிலும் வாகன பேரணி ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

இதனால் கொழும்பு நகர மண்டபப் பகுதியில்  கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


IMG_20170915_153200 IMG_20170915_153257 IMG_20170915_154316

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg