Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாராக் கடன் நடப்பு நிதி ஆண்டில் மேலும் ஒரு சதவீதம் அதிகரிப்பு

In வணிகம்
Updated: 12:22 GMT, Sep 15, 2017 | Published: 12:22 GMT, Sep 15, 2017 |
0 Comments
1360
This post was written by : Kemasiya

வங்கிகளின் வாராக் கடன் நடப்பு நிதி ஆண்டில் மேலும் ஒரு சதவீதம் அதிகரிக்கும் என்று தரச்சான்று நிறுவனமான கிரிசில் ரேட்டிங் அமைப்பு கணித்துள்ளது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வங்கிகளின் வாராக் கடன் அளவு 10.5 சதவீத அளவுக்கு உயர்ந்திருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் (மார்ச் 2017) வங்கிகளின் வாராக் கடன் அளவு 9.5 சதவீதமாக உள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு கடன் தொகையானது பெரு நிறுவனங்களுக்கு அளித்த கடன் தொகையாகும். இவற்றைத் திரும்பப் பெறுவது கடினமாக இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

வங்கிகளின் வாராக் கடன் அளவு தற்போது 14 சதவீத அளவுக்கு உள்ளது. அதாவது ஒட்டுமொத்த வாராக் கடன் அளவு ரூ. 11.5 லட்சம் கோடியாகும். இதில் திரும்பாக் கடன் என்பது எந்த அளவு என்பது உறுதிபடத் தெரியவில்லை.

இத்தகைய சூழலில் நடப்பு நிதி ஆண்டின் இறுதியில் ஒட்டுமொத்த வாராக் கடன் அளவு 10.5 சதவீதத்தை எட்டும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. வாராக் கடனில் பெரும்பகுதி கடன் தொகை எரிசக்திஇ கட்டுமானம் மற்றும் பொறியியல் துறை உள்ளிட்டவற்றுக்கு வழங்கப் பட்டுள்ளது.

வங்கிகளின் வாராக் கடனை வசூலிக்க தற்போது திவால் மசோதா சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கடனை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் செயல்பட்டால்தான் வங்கிகளின் சொத்து மதிப்பு நிலை உயரும் என்றும் கிரிசில் சுட்டிக் காட்டியுள்ளது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg