Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்சன்ஸ் கிறின் முதல் ஸ்கொட்லன்ட்யாட் வரை 2017 இன் 5 வது பயங்கரவாதத்தாக்குதலில் இன்று நடந்ததென்ன?

In இன்றைய பார்வை
Updated: 15:59 GMT, Sep 15, 2017 | Published: 15:56 GMT, Sep 15, 2017 |
0 Comments
1237
This post was written by : Sivaguru Siva

லண்டன் நிலக்கீழ் தொடருந்து வலையமைப்பில் சகல வழித்தடங்களும் இந்த வார இறுதி வேலைநாளுக்கான காலைவேளையில் இன்று பரப்பரப்பாக இயங்கிக்கொண்டிருந்தன.அந்தப்பரபரப்புடன் டிஸ்றிக் லைன் ; (District Line) தொடருந்து வழித்தடமும் இயங்கிக் கொண்டிருந்தது.

_97818062_72025156-5a27-405a-871a-8a5931a370e0

 

அதில் ஒரு தொடருந்து விம்பிள்டன் நிலையத்திலிருந்து கிழக்குப்பகுதியை (eastbound)நோக்கி செல்வதற்கான பயணத்தை ஆரம்பிக்கின்றது. நான்கு நிலையங்களை வழக்கம் போலக்கடந்த வண்டி ஐந்தாவது நிலையமான பார்சன்ஸ் கிறினை (Parsons Green) 8.2;0 க்கு வந்தடைகிறது.

_97819213_parsons_green_bomb_map3_624 (1)

 

அதன் இறுதிப்பொட்டியிக் கதவுஒன்றுக்கு அருகில் பை ஒன்றுக்குள் ஒரு பிளாஸரிக் வாளி வைக்கப்பட்டிருக்கிறது.. உணவகங்களில் பாவிக்கபடும் பெரிய மயோனெஸ் சோஸ் வாளி; அது.

அநாதரவாக கிடந்த அந்த வாளியை காலைவேளை பரப்பரப்பில் யாரும் கவனிக்கவில்லைப்போலும்.

ஆனால் அதற்குள் IED எனப்ப்படும் Improvised Explosive Device

அல்லது நாசகாரமாக பொருத்தப்பட்ட ஒரு வெடிபொறி தூங்கிக்கொண்டிருந்தது.

_97814179_e330b472-249e-42e8-b680-0d16afe1785f

அதனுடன் நேரக்கணிப்பில் வெடிக்கவைக்கும் ஒரு ரைமர்பொறி இணைக்கப்;பட்டிருந்ததால் பார்சன்ஸ் கிறின் நிலையத்தில் தொடருந்து நின்றவேளை அது திடிரென பெரும் ஓசையுடன் வெடிக்கிறது.  தீப்பிழம்பை கக்கிய வெடிப்பு அது.

திடீரென எழுந்த தீப்பிழம்பு அருகில் நின்ற 22 பயணிகளை பதம்பார்க்கின்றது

வண்டியில் இருந்த மக்கள் நடந்ததை அறிந்தது பாதி. அறியாததுமீதியாக அச்சத்துடன் சிதறியோடினர்.

பதற்றத்தில் ஒருவர் மீது ஒருவர் உருண்டு புரண்டு நிலையமேடையால் அல்லோல கல்லலோலப்பட்டு ஓடுகின்றனர்.

தொடருந்து சாரதி மற்றும் நிலையப்பணியாளர்கள் நடந்த விபரீதத்தை உணர்ந்து கொண்டனர். வேகமாக பணியாற்றி அவசரகால அழைப்புகளை பறக்கவிட்டனர்.

promo329735693

அவர்கள் அனுப்பிய அவசரகால அழைப்புகளின்படி பலமான ஆயுதஙகளைத்;தாங்கிய காவற்துறையினர்அந்தஇடத்துக்கு விரைந்து வருகின்றனர். அம்புலன்ஸ்வண்டிகளும் அடுத்தடுத்து வருகின்றன. காயமடைந்தவர்கள் அவசரமாக அருகில் இருந்த 4  மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்றனர்.

குண்டு வெடிப்பு இடம்பெற்ற டிஸ்றிக்லைன் தொடருந்து வழித்தடசேவைகள் இடைநிறுத்தப்பட்டன. ஏனைய வழித்தடங்களின் பாதுகாப்புக்கு அதிகளவு காவற்துறையினர் பணியில் அனுப்பப்பட்டனர்.

Police officers stand on the road near Parsons Green tube station in London

இதன்பின்னர்  நூற்றுக்கணக்கான புலனாய்வாளர்களை உடனடியாக களத்துக்கு அனுப்பிய ஸ்கொட்லன்ட ;யாட் காவற்துறை தனது முதற்கட்ட விசாரணைகளை தொடுத்தது.

சொற்பநேரத்தில் தனது அறிக்கையிடலைச் செய்த ஸ்கொட்லன்ட்யாட் இது ஒரு பயங்கரவாதத்தாக்குதல் சம்பவம் என்பதை உறுதிப்படுத்துகிறது

அத்துடன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது Improvised Explosive Device  எனப்படும் தயாரிக்கபட்ட குண்டு என்பதாகவும் கூறியது.

parsons-green-1

இதன்பின்னர் இன்று நண்பகலுக்குபின்னர் பிரித்தானிய தலைமையமைச்சர் திரேசாமே பிரித்தானியாவின் அவசரகால நெருக்கடிக்குழுவான கோப்ராவை கூட்டி நிலைமைகளை ஆய்வு செய்தார் .

தற்போது இந்த குண்டு வாளியை  தொடருந்தில் வைத்தவர் யார் என்பதை தேடி பாரிய தேடுதல் வேட்டைஇடம்பெற்று வருகிறது.

லண்டன் நிலக்கீழ் தொடருந்து வலையமைப்பைப்பொறுத்தவரை அது அதிகளவு பாதுகாப்பு கண்காணிப்பு கமெராக்கள் கொண்ட ஒரு வலையமைப்பாகும்.

அதனால் சீசீரிவி எனப்படும் கண்காணிப்பு பதிவுக்கருவிகளின் காட்சிகளை புலனாய்வாளார்கள் தீவிரமாக ஆய்வு செய்கின்றனர்.

ஸ்கொட்லன்ட்யாட் காவற்துறையும் பிரித்தானிய உள்ளக பாதுகாப்பு அமைப்பான எம்.ஐ 5 உம் இணைந்து இந்த நடவடிக்கைகளை செய்து வருகின்றன

 

_97815161_9f009f73-9821-4e68-b2e8-b2f132390434பிரித்தானியாவைப்பொறுத்தவரை அது இந்த ஆண்டில் சந்தித்த ஐந்தாவது பயங்கரவாதத்தாக்குதல் சம்பவமாகும். இன்று நடந்த சம்பவம் மட்டுமே உயிரிழப்புகள் ஏற்படாத சம்பவமாக பதிவுவாகியுள்ளது.

ஆயினும் ஏனைய 4 தாக்குதல் சம்பவங்களிலும் மொத்தமாக 36 பேர் பலியாகியிருந்தனர்.

ஸ்கொட்லன்ட் யாட் காவற்துறையின் தரவுகளின் படிமேலும் 6 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் குறித்த சதித்திட்டங்கள் முறியடிக்கபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆயினும் இப்போது முக்கிய இரண்டு கேள்விகள் உள்ளன. ஓன்று இன்றைய வாளிக்குண்டு தாக்குதல் சூத்திரதாரி யார் என்பது? இரண்டாவது அவர் எப்போது மடக்கபடுவார்? என்பது.

இந்த வினாக்களுக்கு விடைதேடுவதற்காக ஸ்கொட்லன்ட்யாட்டும்; எம்.ஐ 5 உம் கண்ணுக்குள் எண்ணையை ஊற்றியபடி பணியாற்றுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg