Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சயிட்டம் தொடர்பில் உயர்க் கல்வி அமைச்சின் தீர்மானம்

In இலங்கை
Updated: 02:58 GMT, Sep 16, 2017 | Published: 02:58 GMT, Sep 16, 2017 |
0 Comments
1181
icon_com
This post was written by : Arul Jesu
saitam

மாலபே சயிட்டம் மருத்துவ கல்லூரிக்கு புதிதாக மாணவர்களை இணைத்துக் கொள்ளவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளது.

சயிட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அல்லது மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை வரத்தமானியூடாக அறிவிக்கப்படும் வரை புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ள முடியாது.

இந்த தீர்மானம் உயர்க் கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக சயிட்டம் மருத்துவ கல்லூரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சயிட்டம் மருத்துவ கல்ல}ரியை இரத்துச் செய்ய கோரி கொழும்பில் நேற்று பாரிய ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்தின் இந்த தீர்மானம் வெளியாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg