Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழர்களுக்கு தலைவன் இல்லை : விக்டர் ஐவன்

In இலங்கை
Published: 04:59 GMT, Sep 16, 2017 |
0 Comments
1318
icon_com
This post was written by : Arul Jesu

விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன், தனது கைகளில் தலைமை பதவியை வைத்துக் கொள்ள, தன்னிடம் இருந்த மற்ற தலைவர்களை கொலை செய்தாக சிரேஸ்ட ஊடகவியலாளர் விக்டர்  ஐவன் தெரிவித்துள்ளார்.

வெலிகடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் நேற்று கொழும்பில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இறுதியில் பிரபாகரன் இறந்தவுடன் தமிழ் மக்கள் தலைவன் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், அதே பாலைவனம் போன்ற ஒரு நிலை இன்று சிங்களவர்களுக்கும், முஸ்லிகளுக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அரசாங்கம் மாறினாலும், அரசியல் கலாசாரம் சிறு அளவில் கூட மாற்றம் பெறவில்லை எனவும், கடந்த அரசாங்கம் எந்தவித தயவுதாட்சனியமும் இன்றி உயிர்களை பறித்தாகவும், அரச சொத்துக்களை கொள்ளையிட்டதாகவும் கூறினார்.

அதேபோல் தற்போது இலங்கை தலைவன் அற்ற நாடாக விளங்குவதுடன், பேராசை பிடித்தவர்களே நாட்டில் ஆட்சி நடத்துவதாகவும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg