Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக பதினொருவரை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான் அணி

In கிாிக்கட்
Updated: 05:13 GMT, Sep 16, 2017 | Published: 05:12 GMT, Sep 16, 2017 |
0 Comments
1278
This post was written by : Elakkiya

தென் ஆபிரிக்க வீரர் டு பிளஸிஸ் தலைமையிலான உலக பதினொருவர் அணிக்கும் சஃப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ரி-ருவென்ரி போட்டியில் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

இதன்மூலம் 2:1 என்ற ரீதியில் தொடரை வென்றுள்ள பாகிஸ்தான் மீண்டும் சர்வதேச கிரிக்கட் அரங்கில் வெற்றிப்பாதையில் கால்பதித்துள்ளது.

தொடரை தீர்மானிக்கும் போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற உலக பதினொருவர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதற்கேற்ப முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களை பெற்றது.

அணியின் சார்பில் அஹமட் ஷேசாத் 89 ஓட்டங்களையும் பாபர் அசாம் 48 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

தொடர்ந்து 184 என்ற ஓட்ட இலக்குடன் துடுப்பெடுத்தாடிய உலக பதினொருவர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள 33 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

உலக பதினொருவர் அணியின் சார்பில் டேவிட் மில்லர், திசார பெரேரா ஆகியோர் தலா 32 ஓட்டங்களையும் டரன் ஷமி 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg