Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு பிளஸிஸ் பாராட்டு

In கிாிக்கட்
Updated: 06:15 GMT, Sep 16, 2017 | Published: 06:14 GMT, Sep 16, 2017 |
0 Comments
1815
This post was written by : Elakkiya

சொந்த மண்ணில் சர்வதேச போட்டிகளை நடத்துவதுடன் வெளிநாட்டு கிரிக்கட் அணிகளின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான பாகிஸ்தானின் முயற்சிகளை தென் ஆபிரிக்க வீரரரும் உலக பதினொருவர் அணியின் தலைவருமான டு பிளஸிஸ் பாராட்டியுள்ளார்.

உலக பதினொருவர் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ரி-ருவென்ரி போட்டியின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் டு பிளஸிஸ் மேற்படி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த வாரத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்காக பெருமளவு நேரம், பெருமளவு பணம், அனேகமான திட்டங்கள் மற்றும் நிறைய ஆற்றல்களை பாகிஸ்தான் செலவிட்டுள்ளது. அதனை நான் பாராட்டுகின்றேன். அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக அமைந்திருந்தது. அதற்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன். இங்கு வருவதற்கு நினைத்த போது சிறிது பதற்றம் இருந்தது. ஆனால் தற்போது அத்தகைய பதற்றங்கள் எவையும் என்னிடம் இல்லை. இந்த வாரத்தை மிகவும் சிறப்பாக அனுபவித்தோம். இந்த சுற்றுப்பயணமானது கிரிக்கட் எல்லைகளை கடந்து மற்றுமொரு நினைவூட்டலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்த இலங்கை அணி வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்கு சர்வதேச அணிகள் தயக்கம் காட்டியிருந்தன.

நீண்டகால முயற்சியின் பின்னர் சர்வதேச கிரிக்கட் சபையின் உதவியுடன் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட உலக பதினொருவர் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரின் மூலம் சர்வதேச போட்டிகளை தமது நாட்டில் நடத்த முடியும் என்பதையும் கிரிக்கட் உலகுக்கு பாகிஸ்தான் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த தொடரை 2:1 என்ற ரீதியில் பாகிஸ்தான் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg