Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொரிய தீபகற்ப பதற்றம்: கேள்விக்குறியாகியுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்

In விளையாட்டு
Updated: 07:49 GMT, Sep 16, 2017 | Published: 07:49 GMT, Sep 16, 2017 |
0 Comments
1194
This post was written by : Elakkiya

கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியிலும் பியோங்யாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நெறிமுறைகளுக்கான ஆணையகத்தின் தலைவர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பியோங்யாங்கில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகள் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த ஐ.நா சபையின் முன்னாள் செயலாளரும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நெறிமுறைகளுக்கான ஆணையகத்தின் தற்போதைய தலைவருமான பான்-கீ.மூன், “விளையாட்டு என்பது உலகளாவிய மொழியாக உள்ளது. பனிப்போர் இடம்பெறும் காலப்பகுதியில் கூட எங்கு வேண்டுமென்றாலும் போட்டி நடைபெறலாம். கொரிய தீபகற்பத்தில் பதற்றங்கள், அழுத்தங்கள் அதிகரித்தாலும் பியோங்யாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மாபெரும் வெற்றியை பெறும் என்று நான் உறுதியான நம்புகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த காலத்தில் இடம்பெற்ற போட்டி போன்று பியோங்யாங் ஒலிம்பிக் வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கு இடையில் ஐக்கியப்படுத்தும் சக்தியாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg