Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்: பிரித்தானியா நிலைப்பாட்டை தெளிவாக வரையறுக்கவில்லை – பிரான்ஸ்

In ஐரோப்பா
Updated: 09:05 GMT, Sep 16, 2017 | Published: 08:17 GMT, Sep 16, 2017 |
0 Comments
1260
This post was written by : Suganthini

பிரெக்சிற் தொடர்பில் பிரித்தானியா இன்னும் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக வரையறுக்கவில்லை என, பிரான்ஸ் பிரதமர் எடோர்ட் பிலிப் (Edouard Philippe) ) தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் தலைநகரான பேர்லினுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) பிரான்ஸ் பிரதமர் விஜயம் செய்துள்ள நிலையில், அங்கு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

இதன்போது, பார்வையாளர்களால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் பிரெக்சிற் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவுடன் கடும் போக்காக நடந்துகொள்வது தமது எண்ணம் இல்லை.

ஆனால், உண்மை என்னவெனில், இதற்கான பேச்சுவார்த்தையில் கடினம் காணப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg