Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குண்டு வெடிப்புக்கு உரிமை கோரியுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள்

In
Updated: 08:34 GMT, Sep 16, 2017 | Published: 08:34 GMT, Sep 16, 2017 |
0 Comments
1395
This post was written by : Suganthini

லண்டனில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் உரிமை கோரியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் தாம் உள்ளதாகவும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர் என்று ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் நிலையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சிறியரக குண்டொன்று வெடித்துள்ளது.

இதில் 29 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் எரிகாயங்களுக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மிகவும் சன நடமாட்டம் பரபரப்பாகக் காணப்பட்ட வேளையில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டொன்றே இதன்போது வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg