Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்காலத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்: செங்கோட்டையன்

In இந்தியா
Updated: 08:58 GMT, Sep 16, 2017 | Published: 08:58 GMT, Sep 16, 2017 |
0 Comments
1220
This post was written by : Vithushagan

எதிர்வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்த அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் கல்வியாண்டு முதல் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மாநிலம் முழுவதும் நடைபெற்ற ஆய்வில் 10 சதவீதம் மாணவ-மாணவிகள் கற்றல் குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர் வரும் காலங்களில் எந்த தேர்வானாலும் சந்திக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்திற்கு இணையாக தமிழர் பண்பாடு, கலாச்சாரம், தொன்மை மாறாமல் பாடத்திட்டம் மாற்றி அமைக்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அனந்த கிருஷ்ணன் தலைமையிலான கல்விக் குழுவினர் 6 மாநிலங்களுக்கு சென்று பாடத்திட்டத்தை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg