Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மட்டு.மாவட்ட பொலிஸ் நிலையங்களில் அரையாண்டு பரிசோதனைகள் ஆரம்பம்!

In இலங்கை
Published: 09:48 GMT, Sep 16, 2017 |
0 Comments
1205
icon_com
This post was written by : Ravivarman
S4920015

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டின் அரையாண்டுக்கான பொலிஸ் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் 2017 ஆண்டின் கடந்த அரை வருடத்திற்கான பொலிஸ் பரிசோதனை இன்று (சனிக்கிழமை) காலை மஞ்சந்தொடுவாய் ஜீவ ஒளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராய்ச்சி தலைமையிலான பொலிஸ் குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. சமன் யட்டவர ஏற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தியத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஆளுமை,தோற்றம்,ஆரோக்கியம் என்பன மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பரிசோதிக்கப்பட்டது.

மேற்படி பொலிஸ் பரிசோதனை மேற்படி விளையாட்டு மைதானத்திலும் பொலிஸ் வாகனப் பரிசோதனை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் நடைபெற்றன.

குறித்த பொலிஸ் பரிசோதனை மற்றும் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகளில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தியத்திலுள்ள ஏனைய பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள், ஆண், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

S4920023 S4920022 S4920018 S4920012 S4920011

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg