Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தில் பாதுகாப்பு பலப்படுத்தல்

In
Updated: 09:46 GMT, Sep 16, 2017 | Published: 09:46 GMT, Sep 16, 2017 |
0 Comments
1234
This post was written by : Suganthini

லண்டனில்; இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில்,  ஸ்கொட்லாந்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஸ்கொட்லாந்து பூராகவும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

லண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் நிலையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சிறியரக குண்டொன்று வெடித்துள்ளது.

இதன்போது, 29 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் எரிகாயங்களுக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, மற்றுமொரு தாக்குதல் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், ஸ்கொட்லாந்தில் அதிகளவான பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் பொருட்கள் ஏதும் காணப்படின் அது தொடர்பில் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg