Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தேர்தலைக் கட்டாயம் டிசம்பரில் நடத்த வேண்டும்: மஹிந்த

In இலங்கை
Published: 10:02 GMT, Sep 16, 2017 |
0 Comments
1293
icon_com
This post was written by : Ravivarman
z_p02-Govt

20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மாகாண சபைத் தேர்தலை கட்டாயமாக நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“20 ஆவது திருத்தச் சட்டம் குறித்து மக்கள் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டுமா இல்லையா என்பது தொடர்பாக தெரியாது. இது தொடர்பான உயர்நீதிமன்றின் விளக்கம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மூன்றிலிரண்டு பெரும்பான்மை போதுமானது என நிறைவேற்றப்பட்டால் இந்த ஆண்டில் மாகாணசபைத் தேர்தல் இடம்பெறாது என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மக்கள் கருத்துக்கணிப்பு அவசியம் எனக் குறிப்பிட்டால், நிச்சயமாக தேர்தலொன்றை நடத்த வேண்டும். ஒக்டோபர் 2 ஆம் திகதி வேட்புமனுகோரி, தேர்தலை கட்டயமாக நடத்தவேண்டிய நிலை ஏற்படும்.

நீதிமன்றின் தீர்ப்புக் கிடைக்காது மாகாண சபைகளை பின்நோக்கி கொண்டு செல்ல முடியாது. 20 ஆவது திருத்தச் சட்டம் வராவிட்டால், எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி தேர்தலைக் கட்டாயமாக நடத்தவேண்டும்” என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg