Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிடைப்பவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும்: மனோ

In இலங்கை
Published: 10:05 GMT, Sep 16, 2017 |
0 Comments
1488
This post was written by : Arul Jesu

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, இலங்கை சமஷ்டி நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழில் செயற்படும் சில அரச சார்ப்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை இன்று சந்தித்த பின்னர் யாழ்.கச்சேரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 20 ஆவது திருத்தச் சட்டத்தை தவறவிட்டால் இனி விமோசனம் கிடைக்காது எனவும் தெரிவித்தார்.

எனவே கிடைப்பவற்றை பெற்றுக் கொண்டு திடன் கொண்டவர்களாக முன்னோக்கி பயணிக்க வேண்டும் என நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் அரசியல் தீர்வை அடிபiடாயக கொண்டே இந்த 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் கொண்டுவரப்படவுள்ளதாகவும், காணாமல் போனோருக்கு தக்க பதிலை வழங்க அரசாங்கம் கடமைபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தன்னிடம் மாற்று கருத்து இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கிழக்கு மாகாணத்தின் முதல்வர் தோற்கடிக்கப்பட்டால் மாத்தரமே அங்கு சுமுகமான ஆட்சி நிலவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg