Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மோசூலில் இருந்து வெளியேறி புதிய தாக்குதலுக்கு தயாராகும் கனேடிய படையினர்

In கனடா
Updated: 10:41 GMT, Sep 16, 2017 | Published: 10:41 GMT, Sep 16, 2017 |
0 Comments
1239
icon_com
This post was written by : Elakkiya
ac

மோசூல் நகரிலிருந்து வெளியேறும் கனேடிய படைகள் தற்போது ஐ.எஸ் பயங்கரவாதிகளில் இறுதி வலுவான கோட்டை மீது தாக்குதல் நடத்த தயாராகும் ஈராக்கிய படையினருக்கு ஆதரவளிக்கவுள்ளனர்.

ஈராக் மற்றும் லெவன்ட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான உள்ளூர் குழுக்களுக்கு இடையில் அதிகரித்துவரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கனேடிய படையினர் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

கோடை முழுவதும் மோசூலை பாதுகாப்பதில் ஈராக்கிய படைகளுக்கு உதவிய கனேடிய படையினர் தற்போது ஹவாஜா அருகில் உள்ளன. எனினும் இனிவரும் போரிலும் ஈராக்கிய படையினருக்கு அவர்கள் அதரவு வழங்குவர் என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் படைகளை ஆதரிக்கும் வகையில் வட ஈராக்கில் மாத்திரம் சுமார் 200 கனேடிய சிறப்புபடை வீரர்கள் உள்ளனர். அவர்கள் குர்திஷ் படையினருடன் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg