Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் ஊடகவியலாளர்களாக தெரிவு!

In இந்தியா
Updated: 10:42 GMT, Sep 16, 2017 | Published: 10:42 GMT, Sep 16, 2017 |
0 Comments
1285
This post was written by : Vithushagan

அமெரிக்காவில் நடத்தப்படும் குழந்தைகளுக்கான செய்தி நிறுவனத்தில்  ஊடகவியலாளர்களாக மூன்று இந்திய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2016-2017ஆம் ஆண்டிற்கான  ஊடகவியலாளர்கள் தெரிவின் போதே அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ‘ஸ்காலஸ்டிக் நியூஸ் கிட்ஸ்’ என்ற பத்திரிகை நிறுவனத்தில் குழந்தைகளுக்கான செய்திகளை குழந்தைகளே வழங்கி வருகின்றனர்.

அதன் படி உலகின் பல நாடுகளிலிருந்து 10 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இந்த நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களிடமிருந்து சில சிறுவர்கள் மட்டும் பத்திரிக்கையாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்நிலையில் 2016-2017ஆம் ஆண்டிற்கான  ஊடகவியலாளர் தெரிவு நடைபெற்றது. இதற்கு இந்தியாவில் இருந்து மட்டும் 400 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்குழந்தைகள் உலகத்தின் முக்கிய பிரமுகங்களை பேட்டி எடுத்து செய்தி வெளியிடுவர். இது குறித்த செய்திகள் இணையதளங்களில் பதிவு செய்யப்படும். புத்தகங்களாகவும் வெளியிடப்படும். இதன்மூலம் 25 மில்லியன் மாணவர்கள் பயன்பெறுவர்.

உலகளவில் தெரிவு செய்யப்பட்ட 44 சிறுவர்களில் 3 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg