Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

லண்டன் குண்டு வெடிப்பு – ஒருவர் கைது

In
Published: 10:29 GMT, Sep 16, 2017 |
0 Comments
1239
icon_com
This post was written by : Suganthini
uk

லண்டனில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் 18 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

லண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் நிலையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சிறியரக குண்டொன்று வெடித்துள்ளது.

இதன்போது, 30 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் எரிகாயங்களுக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார், மேற்படி நபரை இன்று (சனிக்கிழமை) கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சந்தேக நபரை, பயங்கரவாதக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg