Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விஜய் சேதுபதி தரும் மெர்சல்!

In சினிமா
Published: 12:10 GMT, Sep 16, 2017 |
0 Comments
1529
icon_com
This post was written by : Surenth
Vijay Sethubathy

விஜய் சேதுபதியின் 25ஆவது திரைப்படமாக உருவாக இருக்கிறது ‘சீதக்காதி’ திரைப்படம். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார்.

அய்யா என்கிற நாடக மேடைக் கலைஞரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் ‘சீதக்காதி’ திரைப்படத்தில் 75 வயது, 50 வயது மற்றும் 30 வயது என மூன்று விதமான வெவ்வேறு வயதுடைய தோற்றங்களில் விஜய்சேதுபதி நடிக்கிறார். இவற்றில் 75 வயதுடைய தோற்றத்தில் உள்ளவரை மேக்கப் ஹொலிவுட் மேக்கப்மேனை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக விரைவில் லொஸ் ஏஞ்சல்ஸ் சென்று ஹொலிவுட் மேக்கப் கலைஞர் கிரேக் கேனம் என்பவரைச் சந்திக்கவிருக்கிறாராம் விஜய்சேதுபதி. ‘மிசஸ் டவுட்பயர்’, ‘த க்யூரியஸ் கேஸ் ஒப் பெஞ்சமின் பட்டன்’, ‘டிராகுலா’ போன்ற ஹாலிவுட் திரைப்படங்களுக்காக ஆஸ்கர் விருதுகளை வென்றவர் கிரேக் கேனம். ஷாருக்கானின் ‘ஃபேன்’ மற்றும் ‘கபூர் அண்ட் சன்ஸ்’ போன்ற ஹிந்தி திரைப்படங்களுக்கும் மேக்கப் கலைஞராகப் பணியாற்றியுள்ளார் கிரேக் கேனம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg