Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

உண்ணாவிரதம் மேற்கொள்ளும் கைதிகளின் கோரிக்கை குறித்து ஆராய குழு அமைப்பு!

In இலங்கை
Published: 11:12 GMT, Sep 16, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Ravivarman
654415791prison3

உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் கைதிகளின் கோரிக்கைகள் குறித்து ஆராய்வதற்கென குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெரனிய குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தமக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தமது தண்டனைக் காலத்தை 20 வருடங்களாக குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், போகம்பரை சிறைச்சாலையில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 30 கைதிகள் நேற்றுக் காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை இதற்கு ஆதரவளிக்கும் வகையில் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 30 கைதிகளும் நேற்று மாலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே இது தொடர்பாக ஆராய்வதற்காக சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சு இணைந்து குழுவொன்றை அமைத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg