Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மியன்மார் நெருக்கடி – 230,000 சிறுவர்கள் அடிப்படை வசதிகளின்றி பரிதவிப்பு

In உலகம்
Published: 12:26 GMT, Sep 16, 2017 |
0 Comments
1161
icon_com
This post was written by : Suganthini
roginya

பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்கியா சிறுவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலைமையில் உள்ளனர் என, தொண்டுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளின்றி சிறுவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

2 இலட்சத்து 30 ஆயிரம் சிறுவர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன என ஐக்கிய நாடுகளின் சிறுகளுக்கான நிதியம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு வயதுக்கு உட்பட்ட 36 ஆயிரம் கைக்குழந்தைகள் உள்ளனர் என்பதுடன், 5 வயதுக்கு உட்பட்ட 92 ஆயிரம் சிறுவர்கள் உள்ளனர் எனவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் முகவரகம் கூறியுள்ளது.

இவர்கள் இலகுவில் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகக்கூடிய நிலைமையில் உள்ளனர் எனவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் முகவரகம் கூறியுள்ளது.

இது இவ்வாறிருக்க, பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்கியா அகதிகளில் 52 ஆயிரம் கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் உள்ளனர் எனவும் அந்த முகவரகம் தெரிவித்துள்ளது.

மியன்மார், ராஹினி மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல் அதிகரித்துக் காணப்படும் வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து பங்களாதேஷுக்கு தப்பிச் செல்லும் ரோஹிங்கியா அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், ரோஹிங்கியா அகதிகள் சுமார் 3 இலட்சத்து 91 ஆயிரம் பேர் பங்களாதேஷில் இதுவரையில் அடைக்கலம் கோரியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg