Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

குப்பைகளை புதைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு!

In இலங்கை
Published: 16:46 GMT, Sep 16, 2017 |
0 Comments
1157
icon_com
This post was written by : Ravivarman
IMG_2183

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபையினால் குப்பைகளை புதைப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கை அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கொட்டப்பட்டு வந்த நிலையில் அங்கு தீ பரவியதையடுத்து அங்கு கழிவுகள் கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதன்போது நீதிவான் நீதிமன்றிலும் குறித்த பகுதி மக்களினால் வழக்கு தொடரப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை குறித்த திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 17 நாட்களுக்கும் மேலாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகள் அகற்றப்படாத காரணத்தினால் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளிலும் வாவிக்கரையோரங்களிலும் குப்பைகளை பொதுமக்கள் வீசிச்செல்லும் நிலையேற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பெரும் சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன், குப்பைகளையும் கழிவுகளையும் அகற்றுவதில் மட்டக்களப்பு மாநகரசபை சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது.

இந்த நிலையில் பாலமீன்மடு பகுதியில் உள்ள அரச காணியில் கழிவுகளை கொட்டி அதனை மூடிவிடும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொள்ள எடுத்த நடவடிக்கைக்கு இன்று பகல் அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர்.

IMG_2184

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg