Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நீரியல் வளத்துறை திணைக்களத்தின் தகவல் நிலையம் திறந்து வைப்பு!

In இலங்கை
Published: 16:53 GMT, Sep 16, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Ravivarman
DSC_0050

மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் தகவல் நிலையம் இன்று (சனிக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையத்தினை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் கைத்தொழில் பணிப்பாளர் நிகால் பாலித திறந்து வைத்தார்.

மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் செயற்படுத்துகைக்கு அமைவாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், உலக உணவு விவசாய ஸ்தாபனத்தினால் குறித்த தகவல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது.

மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் கைத்தொழில் பணிப்பாளர் நிகால் பாலித, உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் திட்ட பணிப்பாளர் எஸ்.சுதர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் காப்புறுதி செய்திருந்த மீனவர் ஒருவர் கடலில் உயிரிழந்த நிலையில் அவரது மனைவிக்கு காப்புறுதி பணம் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

DSC_0083 DSC_0079 DSC_0062 DSC_0058 DSC_0100 DSC_0118DSC_0104

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg