Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிரிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப நிதி உதவி

In உலகம்
Published: 04:20 GMT, Sep 17, 2017 |
0 Comments
1167
icon_com
This post was written by : Suganthini

சிரியாவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி, அவர்களை இயல்பு நிலைமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மக்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்களை முன்னெடுக்கும் வகையில், உலக உணவுத் திட்டம் நிதி உதவி அளித்துள்ளது.

மத்திய நகரமான ஹோம்ஸில், முதற்கட்டமாக உதவித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், ஏனைய நகரங்களிலும் இவ்வாறான உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என, ஹோம்ஸ் நகரில் பணியாற்றும் உலக உணவுத் திட்ட பணியாளரான சலீம் மௌஸா தெரிவித்துள்ளார்.

ஹோம்ஸ் நகரில் மூன்று வெதுப்பகங்களை புனரமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை, நாட்டின் பிரதான தொழிலான தேனீ வளர்ப்புத் திட்டத்தை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த தேனீ வளர்ப்புத் திட்டமானது, யுத்தத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

இவற்றின் மூலம் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமாகியதிலிருந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், அங்கு வசிக்கும் 23 மில்லியன் மக்களின் அரைவாசிக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg