Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்தார் மோடி(2ஆம் இணைப்பு)

In இந்தியா
Published: 05:27 GMT, Sep 17, 2017 |
0 Comments
1273
icon_com
This post was written by : Kemasiya

குஜராத்தில் உள்ள உயரம் அதிகரிக்கப்பட்ட  சர்தார் சரோவர்  என்னும் அணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது பிறந்த நாளில் திறந்து வைத்துள்ளார்.  இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி ஆகியோர் பங்கேற்றனர்.

இன்று காலை காந்தி நகருக்கு சென்று தனத தாயிடம் ஆசிபெற்ற பின்னர் சர்தார் சரோவர்  அணையை திறந்து வைக்க சென்றார்.தொடர்ந்து கேவடியா பகுதியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் அருகில் உள்ள சாதுபெட் பகுதிக்கு செல்கிறார். அங்கு 182 அடி உயரத்தில் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்கும் பணிகளை மோடி பார்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்தார் சரோவர் அணையை இன்று திறந்து வைக்கின்றார் மோடி

குஜராத் மாநிலத்தில் உயரம் அதிகரிக்கப்பட்ட சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் பயன் பெறும் வகையில்  திறந்து வைக்கிறார்.

குஜராத்தின் நவகம் பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையின் உயரம் சமீபத்தில் 138.68 மீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களை சேர்ந்த 4 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியடைவதுடன், 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும் பயன்பெற முடியும்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் அருகில் உள்ள சாதுபெட் பகுதிக்கு செல்கிறார். அங்கு 182 அடி உயரத்தில் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்கும் பணிகளையும் பிரதமர் பார்வையிடவுள்ளார்.

பின்னர் அம்ரேலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சந்தை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்வார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

gncfgbn

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg