Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியிடம் கணக்கு கேட்ட பா.ஜ.க தலைவர் அமித்ஷா

In இந்தியா
Published: 05:44 GMT, Sep 17, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Kemasiya
r465tg

நாட்டை 50 ஆண்டுகளாக உங்களின் நான்கு தலைமுறை ஆட்சி செய்திருக்கின்றது. அப்போது நீங்கள் செய்தது என்ன என்பது பற்றி நாட்டு மக்களுக்கு கணக்கு காட்ட வேண்டும் என ராஞ்சியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கு அவர்  மத்திய பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியை குற்றம் சாடி வருவதோடு. மோடியின் கருப்புப்பண தடை குறித்தும் குற்றம் சாடி வருகின்றார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு பதில் கூறும் வகையில் ராஞ்சியில் ஹார்மு மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்    அமித்ஷா கருத்து தெரிவிக்கையில்,

அமெரிக்காவில் இருந்து கொண்டு ராகுல் காந்தி நாம் என்ன செய்தோம் என்று கேட்கிறார். அதற்கு  பதில் சொல்ல நாம் வந்திருக்கிறோம். இந்த நாட்டை 50 ஆண்டுகளாக உங்களின் நான்கு தலைமுறை ஆட்சி செய்திருக்கின்றது. அப்போது நீங்கள் செய்தது என்ன என்பது பற்றி நாட்டு மக்களுக்கு கணக்கு காட்ட வேண்டும்.

மேலும், ராகுல் காந்தி செய்ததை விட நாங்கள் மூன்று மடங்கு அதிகமாக செய்திருக்கிறோம்,  வாஜ்பாய் இந்த மாநிலத்தை உருவாக்கினார், பிரதமர் மோடி இப்போது இந்த மாநிலத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்கிறார். ஆயிரம் நாட்களில் இந்த மாநிலத்தை முதல் அமைச்சர் ரகுபர் தாஸ் மாற்றிக்காட்டியுள்ளார், என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg