Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்காக ஒன்றுகூடுகிறது தமிழரசுக் கட்சி

In இலங்கை
Published: 06:27 GMT, Sep 17, 2017 |
0 Comments
1135
icon_com
This post was written by : Anojkiyan

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி அம்பாறையில் கூடவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சரவை விவகாரம் மட்டுமன்றி, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் வடக்கு மாகாண அமைச்சரவை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சியின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg