Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்

In கிாிக்கட்
Published: 08:11 GMT, Sep 17, 2017 |
0 Comments
2018
icon_com
This post was written by : Surenth

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ரி-ருவன்ரி போட்டியில் இங்கிலாந்து அணி 21ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த போட்டியில் சுனில் நரைனின் சிறப்பான பந்துவீழ்ச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியை பதிவு செய்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

177 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்துள்ளது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக மேற்கிந்திய தீவுகள் அணியின் சுனில் நரைன் தெரிவு செய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg