Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டன் குண்டு வெடிப்பு – மற்றுமொருவர் கைது

In
Updated: 08:25 GMT, Sep 17, 2017 | Published: 08:25 GMT, Sep 17, 2017 |
0 Comments
1203
This post was written by : Suganthini

லண்டனில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

21 வயதுடைய ஒருவர், மேற்கு லண்டனில் ஹெளசிலோ பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் நிலையத்தில் நேற்றுமுன்தினம் சிறியரக குண்டொன்று வெடித்துள்ளது.  இந்தச் சம்பவத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார், டோவர் துறைமுகப்; பகுதியில் 18 வயதுடைய இளைஞர் ஒருவரை ஏற்கெனவே கைதுசெய்துள்ளனர். இந்நிலையில், இரண்டாவது சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தச் சந்தேக நபர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg