Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சசிகலாவின் சிறப்பு சலுகையை வெளிப்படுத்திய பொலிஸ் அதிகாரிக்கு ஜனாதிபதி விருது!

In இந்தியா
Updated: 09:00 GMT, Sep 17, 2017 | Published: 08:56 GMT, Sep 17, 2017 |
0 Comments
2329
icon_com
This post was written by : Kemasiya
201709171350231523_Karnataka-cop-awarded-President-Medal_SECVPF

பெங்களூர் பரப்பன அக்ரஹா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டிய ஐ.பி.எஸ் அதிகாரி ரூபாவுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை)  ஜனாதிபதி பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் நேற்று நடைபெற்ற விழாவில் அம்மாநில ஆளுநர் வாஜுபாய் ரூபாவுக்கு பதக்கம் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹா சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்குவதாக அம்மாநில சிறைத்துறை ஐ.பி.எஸ் அதிகாரி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு ஆதாரமாக சில வீடியோ காட்சிகளையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, ரூபா போக்குவரத்து துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வருடம் சிறப்பாக தனது பணியில் ஈடுபட்டமைக்கு ரூபாவை கௌரவிக்கும் வகையில்   ஜனாதிபதி பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg