Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிா்ப்புக்களை தகா்த்து திட்டத்தை நிறைவேற்றினோம்: அங்குராா்ப்பண நிகழ்வில் மோடி!

In இந்தியா
Updated: 11:19 GMT, Sep 17, 2017 | Published: 10:45 GMT, Sep 17, 2017 |
0 Comments
1214
This post was written by : Kemasiya

குஜராத் நர்மதை நதிக்கரையில் கட்டப்பட்டுள்ள சர்தார சரோவர் அணை திட்டத்துக்கு எழுந்த எதிர்ப்புகள் போல் உலகில் வேறு எந்த திட்டத்துக்கும் இவ்வளவு எதிர்ப்புகள் எழுந்ததில்லை. ஆனாலும் இந்த திட்டத்தை நாம் வெற்றிகரமாக  முடித்துள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்து இன்று(ஞாயிற்றுக் கிழமை) உரையாற்றிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   விழாவில் பேசிய  மோடி, இதுவரை எந்த திட்டமும் இது போன்ற சோதனைகளை சந்தித்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறகையில்,

சர்தார் சரோவர் அணை இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த அணை பொறியியல் துறையின் அதிசயமாக விளங்குகிறது

இந்த திட்டத்தின் தொடக்கத்தில் அணையை பற்றி பல்வேறு தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டன. அதனால் பொதுமக்கள் இந்த திட்டத்தையே நிறுத்தி விடும்படி வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவதூறான கருத்துக்களை பொருட்படத்தாமல் அணையை கட்டி முடித்துள்ளோம்.

நர்மதை அணையில் தேக்கி வைக்கப்படும் நீரால் இந்தோ-பாகிஸ்தான் எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் தாகம் தீர்க்கப்படும். அதேபோல் குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில எல்லை பாதுகாப்பு படைவீரர்களும் பயனடைவார்கள்.

எனது பிறந்த நாளில் இந்த அணையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் பெருமை அடைகிறேன். இதற்கு உறுதுணையாக இருந்த மத்தியப்பிரதேசம் முதலமைச்சா் சிவராஜ்சிங் சவுகான், மகாராஷ்டிரா முதலமைச்சா் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சா் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg