Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுமிக்குச் சூடு வைத்த தாய் கைது!

In இலங்கை
Published: 10:45 GMT, Sep 17, 2017 |
0 Comments
1230
This post was written by : Ravivarman
download

தனது 7 வயதுச் சிறுமிக்கு அவயவங்களில் கரண்டியால் சூடு வைத்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அச்சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பள்ளியடி வீதியை அண்டியுள்ள வீட்டில் இச்சம்வம் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

பயிற்சி வகுப்புக்காகச் சென்திருந்த மேற்படி சிறுமி வீடு திரும்பும்போது அவள் அணிந்திருந்த மோதிரம் இல்லாதிருப்பதைக் கண்ட தாய் ஆத்திரப்பட்டு சிறுமிக்கு நெஞ்சுப் பகுதி, கால்பாதம், கைகள், வயிற்றுப் பகுதி ஆகிய அவயவங்களில் கரண்டியால் சூடு வைத்துள்ளார்.

சிறுமியின் அவலக் குரல் கேட்ட அயலவர்கள் இந்த விபரீதத்தை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுமியை மீட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்ததோடு தாயைக் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg