Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவப் பயிற்சியை கண்டித்து சுவீடனில் ஆர்ப்பாட்டம்

In ஐரோப்பா
Updated: 10:59 GMT, Sep 17, 2017 | Published: 10:59 GMT, Sep 17, 2017 |
0 Comments
1171
This post was written by : Suganthini

நேட்டோவுடனான இராணுவப் பயிற்சிக்கும் அமெரிக்கா தலைமையிலான இராணுவப் படையினரை தமது நாட்டில் நிலைகொள்ளச் செய்வதற்கும் சுவீடன் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சுவீடனைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

‘நேட்டோவுடனின்றி, எமது நாட்டின் எல்லைகளை நாம் பாதுகாக்க விரும்புகின்றோம். ஏனெனில், நேட்டோவுடனான எமது நட்பு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது’ என சுவீடன் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

நேட்டோவுடன் இணைந்து சுவீடன் இராணுவத்தினர் கடந்த புதன்கிழமை பயிற்சியை ஆரம்பித்துள்ள நிலையில், சுமார் 19 ஆயிரம் படையினர் இதில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg