Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாகிஸ்தானில் தேர்தல்: சுமூகமாக வாக்களிப்பு

In உலகம்
Published: 11:46 GMT, Sep 17, 2017 |
0 Comments
1097
icon_com
This post was written by : Suganthini

பாகிஸ்தான், லாகூரில் இடைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், பொதுமக்கள் சுமூகமான வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 3 இலட்சத்து 24 ஆயிரத்து 786 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், மக்கள் வாக்களிப்பதற்காக 220 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என, தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தானின்; முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது.

இந்நிலையில், நவாஸ் செரீப்பின் லாகூர் தொகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடைத் தேர்தல் நடத்தப்படுகின்றது.

இந்தத் தேர்தலில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் செரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் போட்டியிடுகின்றார்.

அவரை எதிர்த்து மும்பை தாக்குதல் தீவிரவாதியும் ஜமாத் – உத் -தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத்தின் ஆதரவாளர் யாகூப் ஷேக் போட்டியிடுகின்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg