Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விடுதலைப்புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வாகக் கட்டமைப்புக்கள்: அங்கஜன்

In இலங்கை
Updated: 15:16 GMT, Sep 17, 2017 | Published: 15:16 GMT, Sep 17, 2017 |
0 Comments
1746
This post was written by : Ravivarman

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் நல்ல நிர்வாகக் கட்டமைப்புக்கள் காணப்பட்டன என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சாரமண்டபத்தில் சர்வதேச தொளிலாளர் சங்கமும் ஸ்ரீலங்கா சுதந்திர தொளிலாளர் சங்கமும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வுக் கல்விக்கருத்தரங்கில் பிரதம விருந்தினராக கலந்து உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் தொழிலாளர்கள் தமக்குரிய உரிமைகள் சலுகைகள் மற்றும் சட்டங்கள் என எதையும் அறியாதவர்களாய் இருக்கின்றார்கள்.

இத்தகைய செயலால் முதலாளி வர்க்கம் தொளிலாளர்களை சுரண்டுகிறார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான சூழ்நிலைகள் அரிதாகவே காணப்பட்டன.

ஏனெனில் அவர்களது கட்டமைப்புக்கள் திடமானவையாகவும் தெளிவானவையாகவும் காணப்பட்டதென தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் SLNSS இன் பொதுச்செயலாளர் வெஸ்லி தெய்வேந்திரா மற்றும் தொளிலாளர் பிரதி ஆணையாளர் திருமதி ஜெகதீஸ்வரி மற்றும் வளவாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் என இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

received_1446811655432840 received_1446811615432844 received_1446811595432846 received_1446811565432849 received_1446811505432855

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg