Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விடுமுறையுடன் ஊதியம்!

In இலங்கை
Updated: 06:05 GMT, Sep 18, 2017 | Published: 02:23 GMT, Sep 18, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : Anojkiyan
z_p-01-CEB

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு கடந்த 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளை சம்பளத்துடனான விடுமுறையாக கருதுவதாக மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் மிக விரைவில் பணிக்கு திரும்புமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றபோது, பாரிய மோசடிகள் இடம்பெறுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளபோதும், தீர்வுகள் எட்டப்படாத நிலையில் தொடர்ந்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg