Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நீதிபதிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேல் நீதிமன்ற குழு பரிசீலனை

In இந்தியா
Updated: 03:58 GMT, Sep 18, 2017 | Published: 03:41 GMT, Sep 18, 2017 |
0 Comments
1079
icon_com
This post was written by : Kemasiya
chennai_high_court_long_1_17571_11489

சென்னை உயர் நீதிமன்றம் உட்பட 8 உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதி பதவியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் புதிய நீதிபதிகளை நியமனம் செய்வது குறித்து மேல் நீதிமன்ற குழு பரிசீலனை செய்து வருகின்றது.

மத்திய சட்ட அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி கடந்த 1ஆம் திகதி நிலவரப்படி 24 உயர் நீதிமன்றங்களின் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணி இடங்களின் எண்ணிக்கை 1,079. அவற்றில் 413 பணி இடங்கள் வெற்றிடமாக உள்ளன.

 கடந்த மாதம் 28ஆம் திகதி மேல் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவி ஏற்ற பிறகு, எந்தவொரு ஐகோர்ட்டுக்கும் நீதிபதி நியமனம் தொடர்பாக பரிந்துரை எதுவும் செய்யப்படவில்லை.

13 உயர் நீதிமன்றங்களில் புதிய நீதிபதிகளை நியமிக்கவும் கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும், மேல் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகளை கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் சென்னை, ஜார்கண்ட், கர்நாடகம், குஜராத், மும்பை உள்ளிட்ட 8உயர் நீதிமன்றங்களக்கு புதிய நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு 36 பேரின்  பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

மேலும் 5 உயர் நீதிமன்றங்களில்   கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கு 25 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இது தவிர்த்து ஆந்திரா-தெலுங்கானா, கொல்கத்தா, டெல்லி, இமாசலபிரதேசம், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய 6 உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பதவிக்கும் நியமனங்கள் செய்ய பரிந்துரைக்கப்பட்டு நிலுவையில் உள்ளன.

இந்த பரிந்துரைகள் அனைத்தும் மேல் நீதிமன்றத்தின்   தலைமை நீதிபதியாக இருந்து, கடந்த மாதம் 27ஆம் திகதி பணி நிறைவு செய்த ஜே.எஸ். கேஹர் பதவிக்காலத்தில் செய்யப்பட்டவை ஆகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg