Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாட்டுக்கு நிலநடுக்க எச்சரிக்கை!

In இந்தியா
Updated: 04:43 GMT, Sep 18, 2017 | Published: 04:43 GMT, Sep 18, 2017 |
0 Comments
1465
This post was written by : Surenth

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பதி மலையிலும் தமிழ்நாட்டின் தரங்கம்பாடி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் பாலாறு ஓடும் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று புவியியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

மகாராஷ்ட்ராவின் லத்தூர், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்புர் உள்ளிட்ட இடங்களில் அண்மையில் இடம்பெற்ற நிலநடுக்கங்களை அடுத்து தற்போது இவ்வாறு நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிலநடுக்கத்தை எச்சரிக்கை செய்யக்கூடிய இணையத்தளம் ஒன்று 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து செயல்படும் என இந்திய புவியியல் சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg