Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

20வது திருத்தச் சட்டம் தொடர்பில் இன்று ஆராயவுள்ளதாக கயந்த தகவல்

In இலங்கை
Published: 04:10 GMT, Sep 18, 2017 |
0 Comments
1141
This post was written by : Anojkiyan
gayantha1-720x450-720x450

20வது திருத்தச் சட்டம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆலோசனை நடத்துவதற்காக ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணா திலக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “20வது திருத்தச் சட்டம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் 20வது திருத்தச் சட்டம் குறித்த தீர்ப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே இன்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டம் இடம்பெறுகின்றது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg