Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இலங்கை வருகிறது சீனாவின் உயர்மட்டக்குழு

In இலங்கை
Published: 04:31 GMT, Sep 18, 2017 |
0 Comments
1108
icon_com
This post was written by : Anojkiyan
china

சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்சிம் வங்கியின் சலுகைக்கடன் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் லி டான் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவொன்று அடுத்தவாரம் இலங்கை வரவுள்ளது.

அடுத்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான மதிப்பீடுகளைச் செய்யவே இந்தக் குழு இலங்கை வரவுள்ளது.

நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசனம், வடிகாலமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மேலும் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இலங்கை வரவுள்ள சீன எக்சிம் வங்கிக் குழுவுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

சீனாவின் எக்சிம் வங்கி ஏற்கனவே, அம்பாந்தோட்டை துறைமுகம், நுரைச்சோலை அனல்மின் நிலையம், மத்தள விமான நிலையம் ஆகிய திட்டங்களுக்கு கடன்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg