Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமெரிக்காவின் உதவி முக்கியம் – ஐ.நா.

In உலகம்
Published: 04:25 GMT, Sep 18, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Suganthini

அகதிகளுக்கான உதவித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவின் உதவி முக்கியமாகும் என, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி (Filippo Grandi) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தனது வேலைத்திட்டத்துக்கமைய, அகதிகளுக்காக வழங்கும் தன்னார்வ உதவியை நிறுத்துவதற்கு முற்படும் வேளையில், அந்த வேலைத்திட்டத்தை தனது முகவரகம் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்டிருந்தார். இதன்போது, அகதிகளுக்கான உதவியை அமெரிக்கா இடைநிறுத்த முற்பட்டால், தம்மால் அகதிகளுக்கான உதவித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

உலகம் பூராகவும் உள்ள அகதிகளை ஆதரிப்பதற்கு அமெரிக்காவின் உதவி முக்கியமாகும்.

எனவே, இந்தப் பிரச்சினைக்கு சிறந்ததொரு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தப் பிரச்சினை தொடர்பில் நியூயோர்க்கில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸனையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவரகம் உள்ளிட்டவற்றுக்கு இதுவரைகாலமும் அளித்து வந்த நிதி உதவியைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவொன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்திருந்தார்.

ஐக்கிய நாடுகளின் செலவு நடவடிக்கையில், தேவையற்ற சுமையை அமெரிக்கா சுமக்க நேரிடுகின்றது எனவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg