Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹீத்ரோ விமான நிலைய பகுதியில் தீவிர சோதனை

In
Published: 04:44 GMT, Sep 18, 2017 |
0 Comments
1307
This post was written by : Risha

ஹீத்ரோ விமான நிலையத்தின் அருகே சர்ரே நகரிலுள்ள ஸ்டான்வெல் குடியிருப்பு பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.

லண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 30 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பிலேயே நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இச்சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஹெளசிலோ பகுதியில் 21 வயதுடைய ஒருவர் பிரித்தானிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அது தொடர்பிலேயே நேற்றைய சோதனை இடம்பெற்றதாக பொலிஸார் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு அங்கமாக சன்பரி பகுதியில் தடயவியல் குழுவினரும் சோதனை நடத்தியிருந்தனர்.

இத்தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே டோவர் துறைமுகப்; பகுதியில் வைத்து 18 வயதுடைய இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg