Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முச்சக்கர வண்டி திருத்தகம் முழுமையாக எரிந்து நாசம்: மன்னாரில் சம்பவம்

In இலங்கை
Updated: 05:12 GMT, Sep 18, 2017 | Published: 05:12 GMT, Sep 18, 2017 |
0 Comments
1311
This post was written by : Anojkiyan

மன்னார் செபஸ்தியார் பேராலய பிரதான வீதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி திருத்தகத்தில் ஏற்பட்ட திடீர் தீ வீபத்தில் குறித்த முச்சக்கர வண்டி திருத்தகம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணியளவில் குறித்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீயினை கட்டுக்குள் கொண்டு வர முற்பட்ட போது அது பலனளிக்கவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தின் போது, திருத்தகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பெறுவாய்ந்த பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த திருத்தகத்தில் எவ்வாறு தீ ஏற்பட்டது என்பது தொடர்பில், மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg